Oct 15, 2026
Thisaigal NewsYouTube

யமுனா ஆற்றின் கரையில் மன்மோகன் சிங் உடல் தகனம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
யமுனா ஆற்றின் கரையில் மன்மோகன் சிங் உடல் தகனம்

புதுடில்லி, டிச. 28-

இந்திய முன்னாள் பிரதமரும், இந்திய பொருளாதார மேதையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் நல்லுடல் முழு அரசு மரியாதையுடன் யமுனா ஆற்றின் கரையில் இன்று தகனம் செய்யப்பட்டது.

மன்மோகன் சிங்கின் நல்லுடல், டெல்லியில் அவரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்பின்னர், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து, மன்மோகன் சிங்கின் நல்லடக்க சடங்கு இறுதி ஊர்வலம் துவங்கி, யமுனா ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகாம்போத் காட் பகுதியை அடைந்தது.

அங்கு முப்படைகளின் ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்திய அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் நேற்று தமது 92 ஆவது வயதில் காலமான முன்னாள் பிரதமருக்கு, இறுதி அஞ்சலி செலுத்தியவர்களில் அடங்குவர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்