கோலாலம்பூர், செப்டம்பர்.06-
மலேசியர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் அரசாங்கத்தின் சாரா உதவித் திட்டத்தை, வெளிநாட்டுத் தலைவர்கள் வியந்து பார்ப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஆசியான் கூட்டங்களில் தாம் பங்கேற்ற போது, அதில் கலந்து கொண்ட வெளிநாட்டுத் தலைவர்கள் மலேசியாவின் இம்முயற்சியைப் பெரிதும் பாராட்டியதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
என்றாலும், இது போன்ற திட்டங்களைத் தங்கள் நாடுகளில் அறிமுகம் செய்வது மிகவும் சவாலான ஒன்றாக அவர்கள் கருதுவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கிய சாரா உதவித் திட்டத்தில் தகுதியுடைய 22 மில்லியன் மலேசியர்களில், 6.6 லட்சம் பேர் இதுவரை பொருட்களைக் கொள்முதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








