வயது குறைந்த பள்ளி மாணவி ஒருவரை காருக்குள் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக இரண்டு ரோஹிங்யா ஆடவர்கள் மலாக்கா, அயேர் கெரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
27 வயது முகமட் ஒஸ்மான் போஷோர் மற்றும் 14 வயதுடைய இளைஞர் ஆகியோர் நீதிபதி முகமட் சப்ரி இஸ்மயில் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இவ்விருவரும் கடந்த வாரம் வியாழக்கிழமை மலாக்கா, பந்தாய் கெளெமாங் கில் ஒரு காருக்குள் 15 வயது பள்ளி மாணவியை மாறி, மாறி பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 30ஆண்ட சிறைத் தண்டனை விதிக்க வகைசெய்யும் குற்றவியல் சட்டம்ட 376 பிரிவின் கீழ் இரண்டு ரோஹிங்யா ஆடவர்களும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
எனினும் இருவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களை தலா 20ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


