Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சரவா மாநிலத்திற்கு புதிய ஆளுநர், விரைவில் அறிவி​க்கப்படும்
தற்போதைய செய்திகள்

சரவா மாநிலத்திற்கு புதிய ஆளுநர், விரைவில் அறிவி​க்கப்படும்

Share:

கோலாலம்பூர்,ஜன.22

சரவா மாநிலத்திற்கு புதிய ஆளுநர் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் மேலவைத் தலைவராக பொறுப்பு வகித்து வரும் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவான்கு ஜாஃபார் பதவி காலியாகவிருப்பதாக கூறப்படுகிறது. 78 வயதான , சரவா மாநிலத்தின் எட்டாவது ஆளுநரான பதவியில் அமரவிருக்கிறார் என்று கோடி காட்டப்பட்டுள்ளது.

புதிய மேலவைத் தலைவர் ஒருவர்​ நியமிக்கப்படுவது தொடர்பி​ல் ஒற்றுமை அரசாங்கத்தின் செயலகம் இன்றிரவு கலந்து ஆலோசிக்கவிருப்பதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சரவா மாநில ஆளுநராக பதவி வகித்து வரும் துன் அப்துல் தாயிப் மஹ்முட் பதவி விலகவிருப்பதையொட்டி புதிய ஆளுநர் நியமிக்கப்படவிருக்கிறார். பழம் பெரும் அரசியல்வாதியும், சரவா மாநிலத்தில் 33 ஆண்டு காலம் மாநில முதலமைச்சராக பதவி வகித்தவரான 87 வயது அப்துல் தாயிப் மஹ்முட்சுகவீனப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது