Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படம்: கல்வி அமைச்சு கடுமையாக கருதுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படம்: கல்வி அமைச்சு கடுமையாக கருதுகிறது

கோலாலம்பூர், டிச.19-


நாட்டில் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் ஆபாச வீடியோ படம் தொடர்பான குற்றச்சாட்டுகளை கல்வி அமைச்சு கடுமையாக கருதுவதாக அதன் அமைச்சர் ஃபட்ஹ்லினா சீடேக் தெரிவித்துள்ளார்.

இது போன்ற ஒழுக்கக்கேடான சம்பவங்கள் தலைத்தூக்குவதை துடைத்தொழிப்பதற்கு உள்துறை அமைச்சு, தொடர்புத்துறை மற்றும் மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டு அ மைச்சு ஆகியவற்றுடன் இணைந்து கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நமது இளையோர்கள் குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது கல்வி அமைச்சின் தலையாயப் பொறுப்பாகும் என்பதை ஃபட்ஹ்லினா சீடேக் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →