குவாந்தான் ஆகஸ்ட்.08-
போலீஸ்காரர் ஒருவருக்கு தலையில் காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக புல் வெட்டும் தொழிலாளி ஒருவருக்கு குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 8 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.
37 வயது முகமட் ஃபிர்டாவுஸ் அப்துல் ஹமீட் என்ற அந்த தொழிலாளி கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிற்பகல் 3.12 மணியளவில் குவாந்தான், பஞ்சிங் போலீஸ் நிலையத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








