ஷா ஆலாம், ஆகஸ்ட்.01-
இம்மாதம் இறுதியில் அரசாங்கம் வழங்கவிருக்கும் சாரா எனப்படும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மாவின் 100 ரிங்கிட் ரொக்கத் தொகையை மைகாட் அட்டையிலிருந்து குறிப்பிட்ட தரப்பினர் எடுக்கலாம் என்று கூறப்படும் கூற்றை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன் அறிவுறுத்தியுள்ளது.
மைகாட் வைத்திருப்பவர், சாரா உதவித்தொகையைப் பெறுபவரா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த தகவல்களைச் சரி பார்ப்பதற்கு ஒரு சாதனமாக மட்டுமே மைகாட் பயன்படுத்தப்படுகிறது என்று ஜேபிஎன் விளக்கம் அளித்துள்ளது.
மைகாட்டின் பங்களிப்பு, தகவல்களைச் சரி பார்ப்பதற்காக மட்டுமே தவிர பணத்தைச் சேமிப்பதற்கோ அல்லது மாற்றுவதற்கோ அல்ல என்று ஜேபிஎன் தெரிவித்துள்ளது.
இந்த உதவித் தொகைக்குரிய 100 ரிங்கிட் பணம் மைகாட் அட்டையில் இருக்காது. மாறாக, சாரா சிஸ்டமில் சம்பந்தப்பட்டவரின் பெயரில் அந்தப் பணம் வரவு வைக்கப்பட்டு இருக்கும் என்று ஜேபிஎன் விளக்கம் அளித்துள்ளது.








