Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்
தற்போதைய செய்திகள்

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

Share:

சுமார் 80 ஆண்டுகள் கால வரலாற்றைக் கொண்ட பாங்கி, வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரத்தில் தமக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம் அளித்துள்ளார்.

ஆலய விவகாரங்கள் தொடர்பாக பல தரப்பினரும் தங்களைச் சந்திக்க விரும்புவது இயல்பு எனக் குறிப்பிட்ட அவர், வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயப் பொறுப்பாளர்களைச் சந்திப்பதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தினார்.

இது குறித்து பாபாராய்டு மேலும் பேசுகையில், "இந்த ஆலய விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் நிச்சயம் நல்ல முடிவு எட்டப்படும். அதே வேளையில், இந்த விவகாரத்தில் தேவையற்ற முறையில் மூன்றாம் தரப்பினர் யாரும் தலையிட வேண்டாம்," என அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

Related News