Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஊழல் பாவங்களை ஹஜ் மன்னிக்காது, அயோப் கான் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

ஊழல் பாவங்களை ஹஜ் மன்னிக்காது, அயோப் கான் கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.09-

ஊழலில் ஈடுபட்ட பிறகு புனித ஹஜ் யாத்திரை செல்வது அவர்களின் பாவங்களிலிருந்து விடுபடாது என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் டான் ஶ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தனது பணியாளர்களுக்கு நினைவூட்டியுள்ளார். “ஊழலைப் பொறுத்தவரை, குறிப்பாக முஸ்லிம்களைப் பொறுத்தவரை, ஹஜ் அல்லது உம்ராவுக்குச் சென்ற பிறகு உங்கள் ஊழல் பாவங்கள் நீங்கிவிடும் என்று நினைக்காதீர்கள் என்று நான் முன்பு சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம்”.
“ஊழல் விஷயத்தில் அப்படி எதுவும் இல்லை. உங்கள் உஸ்தாதிடமும், முஃப்தியிடமும் கேட்டுப் பாருங்கள் என்று அயோப் கான் குறிப்பிட்டார்.
நீங்கள் ஊழலில் ஈடுபட்டு இருந்தீர்கள் என்றால் 32.5 மில்லியன் மலேசியர்களிடம் ஒவ்வொருவராக மன்னிப்புக் கேளுங்கள்,” என்று போலீஸ் பயிற்சி மையத்தில் கேடட் அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுகையில் அயோப் கான் மேற்கண்டவாறு கூறினார்.

ஊழலில் ஈடுபட்டுக் கொண்டே புனித யாத்திரை செல்வது கடவுளின் சட்டங்களைக் கேலி செய்வதற்குச் சமம் என்பதையும் அயோப் கான் நினைவூட்டினார்.

தம்மைப் பொறுத்தவரை, எந்த மதமும் அதன் ஆதரவாளர்களை ஊழல் செய்து, தங்கள் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யச் சொல்லவில்லை என்பதையும் அவர் நினைவுறுத்தினார். அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது புகார் அளிக்கப் புதிய பணியாளர்கள் பயப்பட வேண்டாம் என்றும் என்பதையும் அயோப் கார் வலியுறுத்தினார்.

Related News