நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வலுவான எண்ணமும், புரிதலும், அறிவும் கொண்ட இளம் தலைமுறையினர் தேவை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அரசு நிர்வாகத்தில் எதிர்கொள்ளப்படும் பல்வேறு சிக்கல்கள் மற்றும் சவால்களை சமாளிக்க இளைஞர்களின் திறமையும் தலைமைத்துவப் பண்புகளும் மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார்.
பல இனங்கள், சமயங்கள், பிராந்தியங்கள் மற்றும் பல்வேறு சமூகக் குழுக்களின் தேவைகளை உள்ளடக்கிய நாட்டை நிர்வகிப்பது சிக்கலான பணியாக இருந்தாலும், அதைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.
இன்று புத்ராஜெயாவில் மடானி ஃபெல்லோஷிப் 2026 திட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கான நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் துணைப் பிரதமர்களான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி, டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் மற்றும் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சூல் அஸ்ரி அபு பாக்கார் உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.








