புத்ராஜெயா, ஆகஸ்ட்.20-
21 மில்லியன் ரிங்கிட் நிதியை உள்ளடக்கிய ஒரு போலி முதலீட்டுத் திட்டத்தில் பங்குதாரராக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் ஒரு காப்புறுதி முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயது மதிக்கத்தக்க அந்த சந்தேக நபர், நேற்று இரவு 9 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொடங்கப்பட்ட இந்த போலி முதலீட்டில் 22 பேர் ஏமாற்றப்பட்டதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. அந்த நிதியைத் தாங்கள் பெறவில்லை என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்த போதிலும் இதில் முதலீடு செய்தவர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பது அம்பலமாகியுள்ளது.
இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட காப்பறுதி முகவர் சம்பந்தப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. விசாரணைக்கு ஏதுவாக அந்த காப்புறுதி முகவரை வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தடுத்து வைப்பதற்கு புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கைது நடவடடிக்கையை எஸ்பிஆர்எம் புலனாய்வுப் பிரிவின் மூத்த இயக்குனர் ஸைனுல் டாருஸ் உறுதிப்படுத்தினார்.








