Jun 16, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் பைக் சாகசம்: வைரல் வீடியோவில் சிக்கிய 7 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் பைக் சாகசம்: வைரல் வீடியோவில் சிக்கிய 7 பேர் கைது

Share:

கோலாலம்பூரின் முக்கிய சாலைகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்ததாக, ஒரு பெண் உட்பட மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மே 23 அன்று அதிகாலை 3:30 மணியளவில் ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் துன் ரசாக் மற்றும் ஜாலான் பி. ராம்லி ஆகிய சாலைகளில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதுதொடர்பான 44 விநாடிகள் கொண்ட வீடியோ மே 31 அன்று முகநூலில் வைரலானதைத் தொடர்ந்து, போக்குவரத்து அமலாக்க மற்றும் புலனாய்வுத் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

நேற்ற ஜூன் 1 ஆம் தேதி அதிகாலை நடத்திய சோதனையில், 20 வயது இளைஞர் மற்றும் அவரது 16 வயது காதலி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 18 வயதிற்குட்பட்டவர்கள் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கியதற்கான சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related News