புத்ராஜெயா, ஆகஸ்ட்.17-
மலேசியாவின் கண்ணியத்தையும், அடையாளத்தையும் குறிக்கும் ஜாலூர் கெமிலாங்கை மக்கள் எப்போதும் மதிக்க வேண்டும் என கூட்டரசுப் பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸாலிஹா முஸ்தபா வலியுறுத்தினார். நாட்டின் மரியாதையைப் பாதுகாக்கும் வகையில், வழிகாட்டுதலின்படி கொடியை ஏற்றும் போது வணிக வளாகங்களும் பொதுமக்களும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தேசிய தினம், மலேசியா தினம் ஆகியவற்றை முன்னிட்டு, புத்ராஜெயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அவர் ஜாலூர் கெமிலாங் கொடிகளை விநியோகித்தார். இந்த ஆண்டின் தேசிய தினத்தின் கருப்பொருள் “Malaysia madani: Rakyat disantuni” - “மலேசியா மடானி: மக்கள் நேசிப்போம்” என்பதாகும்.








