நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக இன்று காலை வரையில் 44 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.
அரசாங்க பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்துலக பள்ளிகள் ஆகியவை இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மிரட்டல்கள் யாவும் மின் அஞ்சல் வாயிலாக சைபரஸ் நாட்டிலிருந்து வந்தவை என்றும் அவை குறித்து தீவிரமாக ஆராயப்ப்டடு வருவதாகவும் ஐஜிபி தெரிவித்தார்.








