Oct 1, 2026
Thisaigal NewsYouTube

இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒருவர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒருவர் பலி

தங்காக், டிசம்பர்.12-

ஜோகூர், தங்காக்கில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2.56 மணியளவில் தங்காக், தஞ்சோங் காடிங் லெபோ எஎம்ஜெ சாலையின் 41ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

புரோட்டோன் சாகா மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய வாகனங்கள் இதில் சம்பந்தப்பட்டு இருந்தன. இதில் புரோட்டோன் சகா காரில் பயணம் செய்த ஆடவர் ஒருவர், இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்க அதிகாரி அஸ்லி ஹாஷிம் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →