Dec 3, 2025
Thisaigal NewsYouTube
குழந்தைகளை நீரில் மூழ்கடித்த வழக்கில் தம்பதிக்குக் காவல் நீட்டிப்பு!
தற்போதைய செய்திகள்

குழந்தைகளை நீரில் மூழ்கடித்த வழக்கில் தம்பதிக்குக் காவல் நீட்டிப்பு!

Share:

போர்ட்டிக்சன், செப்டம்பர்.11-

கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி, தஞ்சோங் ஆகாஸ் ஆற்றோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, நீரில் மூழ்கி இரு குழந்தைகள் பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதிக்குக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த 46 வயதான ஆடவருக்கும், 41 வயதான பெண்ணுக்கும் அடுத்த 5 நாட்களுக்குக் காவல் நீட்டிக்கும்படி, காவல் துறை வைத்த கோரிக்கைக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி முகமட் ஃபாரேஸ் ரஹ்மான் அனுமதி வழங்கினார்.

அதே வேளையில், அந்த ஆடவரின் பின்புலத்தை ஆராய்ந்த போலீசார், அவர் மீது ஏற்கனவே 16 வழக்குகள் நிலுவையில் உள்ளதையும், 4 வழக்குகளில் அவர் தேடப்படும் குற்றவாளி என்பதையும் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News