கோலாலம்பூர், அக்டோபர்.31-
மலேசிய விமானப் போக்குவரத்து துறையில் அடுத்த மாதம் முதல் எஸ்செண்ட் ஏர்வெய்ஸ் மலேசியா என்ற விமானச் சேவை நிறுவனம் புதிதாக இணையவுள்ளது.
கோலாலம்பூரைத் தளமாகக் கொண்டுள்ள இந்த விமான நிறுவனமானது, Avia Solutions குழுமத்தின் துணை நிறுவனமாகும்.
Avia Solutions குழுமமானது, விமானம், பணியாளர்கள், பராமரிப்பு மற்றும் காப்பீட்டு சேவைகளைச் சர்வதேச அளவில் வழங்கி வருகின்றது.
இந்நிலையில், மலேசிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் முழுமையான வான் இயக்கச் சான்றிதழ் மற்றும் வான் சேவை அனுமதியை பெற்றுள்ள எஸ்செண்ட் ஏர்வெயிஸ் மலேசியா நிறுவனம், நவம்பர் முதல் செயல்படத் தொடங்கி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா, தென்கிழக்கு ஆசியாவிற்கான முக்கிய விமான மையமாக இருப்பதால், தங்களின் விமானச் சேவை வளர்ச்சிக்கு பெரிய பலமாக இருக்கும் என்று எஸ்செண்ட் ஏர்வெயிஸ் மலேசியாவின் தலைமைச் செயலதிகாரி Germal Singh Khera கூறியுள்ளார்.
வரும் 2026-ஆம் ஆண்டு தொடக்கம் முதல், எஸ்செண்ட் ஏர்வெயிஸ் மலேசியா முழுமையான செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.








