Oct 9, 2026
Thisaigal NewsYouTube

1,700 க்கும் குறைவான ஊதியம் பெறும் தொழிலாளர்கள் உடனடியாக புகார்களை அளிக்க வேண்டும் – கேசுமா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
1,700 க்கும் குறைவான ஊதியம் பெறும் தொழிலாளர்கள் உடனடியாக புகார்களை அளிக்க வேண்டும் – கேசுமா

ஷா ஆலாம், ஜூன்.23-

1,700 ரிங்கிட்டுக்கும் குறைவான ஊதியம் பெறும் தொழிலாளர்கள் உடனடியாக அருகிலுள்ள மனிதவளத் துறையில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தப்படுட்டுள்ளனர்.

கெசுமா எனப்படும் மனிதவள அமைச்சு, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், இது தொடர்பான புகார் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டால், தேசிய ஊதிய ஆலோசனை மன்றம் சட்டத்தின் 44 ஆவது பிரிவின்படி பாதிக்கப்பட்ட தொழிலாளருக்கானச் சம்பளம் மற்றும் இதர அலவன்ஸ் தொகையை வழங்கும்படி முதலாளிக்கு உத்தரவிடப்படலாம் என்று அது கூறியது.

இந்த நாட்டில் தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விதிமுறைகளை பின்பற்ற அனைத்து தரப்பினரும் கடமைப்பட்டுள்ளனர்.

2024 ஆம் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதிய உத்தரவின் கீழ் ஊழியர்கள் குறைந்தபட்ச சம்பளம் பெறுவதை உறுதிச் செய்ய முதலாளிகள் கடமைப்பட்டுள்ளனர்.

இது அடிப்படை சம்பள அமைப்பு அல்லது மொத்த மாத வருமானம் மூலம் செலுத்தப்பட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல், மாதத்திற்கு 1,700 ரிங்கிட் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று அந்த ஆணையம் வலியுறுத்துகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →