டிஏபியிலிருந்து விலகியுள்ள பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி புதிய அரசியல் கட்சி ஒன்றை தோற்றுவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நாட்டில் இந்தியர்கள் நலன் சார்ந்த விவகாரங்களை முன்னெடுக்கவும், அவர்களின் உரிமைகளை நிலைநாட்டிற்கொள்வதற்கான அவசியங்களை வலியுறுத்தவும் ஒரு கல்விமானாகிய 74 வயது டாக்டர் இராமசாமி அந்த புதிய அரசியல் கட்சியை தோற்றுவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தொடர்பில் நாளை அகஸ்ட் 26 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, கொம்ப்லெக்ச் முத்தியாராவில் அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பொறுப்பாளர்களை சந்திப்பதற்கு டாக்டர் இராமசாமி திட்டமிட்டுள்ளதாக அறிக்கைகள் வெளிவந்துள்ளன. புதிய அரசியல் கட்சியை தோற்றுவிப்பது தொடர்பில் டாக்டர் இராமசாமி இதுவரையில் எந்தவொரு அதிகாரப்புர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும் அந்த நோக்கத்தை முன்நிறுத்தி, சமூகத் தலைவர்களை அவர் சந்திக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


