Oct 18, 2026
Thisaigal NewsYouTube

டத்தோஸ்ரீ பங்களிப்பு குறித்து விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டத்தோஸ்ரீ பங்களிப்பு குறித்து விசாரணை

கோலாலம்பூர், செப்டம்பர் 06-

மியன்மாரில் மனித வர்த்தகம் தொடர்பில் மூளையாகசெயல்பட்டவர் என்று சந்தேகிகப்படும் டத்தோஸ்ரீ அந்தஸ்தைக் கொண்ட நபரின் பங்களிப்பு குறித்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை செய்து வருவதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இந்த மனித வர்த்தகம் தொடர்பில் மியன்மாரில் முதலீடு செய்வதற்கு வசதி படைத்த முதலீட்டாளர்களை அடையாளம் காண்பதில் டத்தோஸ்ரீ அந்தஸ்தில் உள்ள நபரின் பங்களிப்பு எவ்வாறு இருந்துள்ளது என்பதை அடிப்படையாக கொண்டே விசாரணையில் முழு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

இதில் சீன நாட்டைச் சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் மற்றும் சில தனிநபர்களையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →