Oct 9, 2026
Thisaigal NewsYouTube

புதிய காவல் துறைத் தலைவர் பிகேஆர் உறுப்பினரா ? மறுத்தார் ஃபுஸியா சால்லே

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புதிய காவல் துறைத் தலைவர் பிகேஆர் உறுப்பினரா ? மறுத்தார் ஃபுஸியா சால்லே

கோலாலம்பூர், ஜூன்.21-

புதிதாக நியமிக்கப்பட்ட காவல்துறைத் தலைவர் காலிட் இஸ்மாயில், பிகேஆர் கட்சியின் உறுப்பினராகவோ அல்லது அதில் எந்தப் பதவியையும் வகித்தவரோ அல்ல என்று பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளர் ஃபுஸியா சால்லே தெரிவித்தார். காலிட் இஸ்மாயில் பிகேஆர் மத்தியக் குழு உறுப்பினர் எனவும் கெடா மாநிலத் தலைவராக இருந்தார் எனவும் சமூக ஊடகங்களில் ஓர் உள்ளூர் நாளிதழில் வெளியான தவறான தகவல், காவல்துறைத் தலைவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்றார்.

இத்தகையத் தவறான தகவல், அரசியல் நியமனங்கள் குறித்த எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கலாம் என்றும், இது குறித்து நாளிதழ் உள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஃபுஸியா சால்லே வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →