கோலாலம்பூர், ஆகஸ்ட்.07-
7 மாத கைக்குழந்தையான தனது வளர்ப்பு மகளைக் கொன்றதாக மாது ஒருவர், கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
38 வயது சித்தி சுப்ரினா இம்ரான் என்ற அந்த மாது, மாஜிஸ்திரேட் நூரெல்னா ஹானிம் அப்துல் ஹாலிம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அந்த மாதுவிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவுச் செய்யப்படவில்லை.
கடந்த ஜுலை 30 ஆம் தேதி காலை 7 மணியளவில் கோலாலம்பூர், செராஸ், ஜாலான் ஶ்ரீ பெர்மைசூரியில் உள்ள ஓர் ஆடம்பர வீட்டில் அந்த மாது தனது வளர்ப்பு மகளைக் கொன்றதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








