ஜாசின், ஜூலை.21-
மலாக்கா, ஜாசினில் 100 ஆண்டு காலப் பழமை வாய்ந்த பலகைக் கடைகள் வரிசை இன்று நிகழ்ந்த தீ விபத்தில் அழிந்தன.
ஒரு நூற்றாண்டை எட்டிய பெக்கான் சிம்பாங் பெகோவில் உள்ள அந்தப் பழங்காலக் கடைகள், இன்று மாலை 4.50 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் முற்றாக அழிந்ததாக தீயணைப்பு, மீட்புப் படை அதிகாரி சைஃபுல் நஸ்ரி முகமட் நோர் தெரிவித்தார்.
உணவகம், துணிக்கடை, பலசரக்குக் கடை, கைப்பேசிக் கடை , மோட்டார் சைக்கிள் பட்டறை என 14 கடைகள் அந்த வரிசையில் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.








