Jun 29, 2026
Thisaigal NewsYouTube
துன் டாயிமின் மூன்று பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளனர் – குடிநுழைவுத் துறை உறுதி
தற்போதைய செய்திகள்

துன் டாயிமின் மூன்று பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளனர் – குடிநுழைவுத் துறை உறுதி

Share:

ஷா ஆலாம், பிப்ரவரி.28-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் தேடப்பட்டு வரும் மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் ஸைனுடினின் நான்கு பிள்ளைகளில் மூவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகக் குடிநுழைவுத் துறைத் தலைவர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

குடிநுழைவுத் துறை பதிவுகளின்படி, அவர்களில் மூவர் கடந்த ஜனவரி இறுதி மற்றும் இந்த மாதத் தொடக்கத்தில் மலேசியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

தேடப்படும் நான்கு பேரில் ஒருவர் மட்டும் இன்னும் நாட்டிற்குள்ளேயே இருக்கலாம் எனக் கருதப்படுகிறது; அவரிடம் நாட்டை விட்டு வெளியேறியதற்கான எந்தப் பயணப் பதிவும் இல்லை.

விசாரணையை எஸ்பிஆர்எம் மேற்கொண்டு வருவதால், அவர்கள் தற்போது எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்ற விவரத்தை வெளியிட முடியாது டத்தோ ஸாகாரியா தெரிவித்தார்.

ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-ன் கீழ் நடைபெற்று வரும் விசாரணைக்கு உதவும் வகையில், டாயிமின் நான்கு பிள்ளைகளையும் தேடி வருவதாக எஸ்பிஆர்எம் நேற்று அறிவித்திருந்தது. அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பயணத் தகவல்களையும் குடிநுழைவுத் துறை வழங்கி வருவதாக டத்தோ ஸாகாரியா குறிப்பிட்டார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு