Dec 3, 2025
Thisaigal NewsYouTube
துரைராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

துரைராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Share:

ஓர் இந்தியப் பிரஜையான விநாயகமூர்த்தி கொலை செய்யப்பட்டு, சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி தூக்கி எறியப்பட்ட சம்பவம் தொடர்பில் ஓர் இந்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் சிலாங்கூர், செரி கெம்பாங்கான், தாமான் புக்கிட் செட்டாங்கில் உள்ள இரும்புக்கடை வளாகத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய எஸ்.துரைராஜ் என்ற தம்பி ச்ஹை என்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

எஸ்.துரைராஜ்ஜின் ஆகக்கடைசியான முகவரி, எண்.03-11 பங்சாபூரி ருசீலியா, தாமான் பிங்கிரான் புத்ரா, செரி கெம்பாங்கான், சிலாங்கூர் என்பதாகும் என்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அ.அ. அன்பழகன் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபரை கண்டவர்கள் அல்லது அந்த நபர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News