பேக்கெட்டுகளில் உள்ளடக்கப்பட்ட சமையல் எண்ணெய்யை வாங்குவதற்கு அடுத்த ஆண்டில் மக்களுக்கு சிறப்பு அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. உதவித் தொகைக்குரிய சமையல் எண்ணெய், இலக்குக்குரிய மக்களை மட்டுமே சென்றடைவதை உறுதி செய்வதற்கு இந்த சிறப்பு அடையாள அட்டை வெளியிடப்படும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீடடாளர் விவகார துணை அமைச்சர் ஃபுசியா சாலெ தெரிவித்தார்.
தற்போது பேக்கெட்டுகளில் உள்ளடக்கப்பட்ட உதவித் தொகைக்குரிய சமையல் எண்ணெய், அனைத்து சந்தைகளிலும் கிடைக்கின்றன. அதனை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற நிலை உள்ளது. இந்த சிறப்பு அடையாள அட்டையை வெளியிடப்படுவது மூலம் அந்த அட்டையை வைத்திருப்பவர்கள் மட்டுமே அரசாங்க மானியத்தற்குரிய பேக்கெட் சமையல் எண்ணெய்யை வாங்க முடியும் என்று துணை அமைச்சர் ஃபுசியா சாலெ விளக்கினார்.








