Dec 2, 2025
Thisaigal NewsYouTube
முன்னாள் பிரதமரின் மகனிடம் விசாரணை
தற்போதைய செய்திகள்

முன்னாள் பிரதமரின் மகனிடம் விசாரணை

Share:

வர்த்தக நடவடிக்கைத் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மினால் விசாரணை செய்யப்பட்டு வரும் அந்த வர்த்தகர், முன்னாள் பிரதமரின் புதல்வர் என்பது தெரியவந்துள்ளது.

நேற்றிரவு 10 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்ட அந்த வர்த்தகரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மலேசியாவில் வரி ஏய்ப்பு செய்து, கோடிக்கணக்கான வெள்ளியை வெளி நாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக கூறப்படும் மலேசிய பிரமுகர்களின் பெயர்களை பனமா பேப்பர்ஸ் அண்மையில் அம்பலப்படுத்தியது.

அவர்களில் முன்னாள் பிரதமர் மகனின் பெயரும் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News