சரவா மாநிலத்தின் முன்னாள் அரசியல் தலைவரும் மாநில ஆளுநருமான துன் அப்துல் தாயிப் மஹ்மூத் உடல் நிலை குறித்து ஆருடம் கூற வேண்டாம் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுபட்டுள்ளது.
தற்போது வெளிநாட்டில் தங்கி சிகிச்சைப்பெற்று வரும் ஆளுநர் அப்துல் தாயிப் குறித்து தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று சரவா மாநில ஆளுநரின் செயலாளர் ஜூனின் சலே அகமது கேட்டுக்கொண்டுள்ளார்.
87 வயதான அப்துல் தாயிப் விரைவில் நாடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு தமது 74 ஆவது வயதில் 30 வயதுடைய சிரியா பெண்ணான ரகாத் வலீத் அல்குர்தி யை மணந்து கொண்ட ஆளுநர் அப்துல் தாயிப், சுகவீன காரணமாக தற்போது வெளிநாட்டில் ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


