கோலாலம்பூர், ஜூலை.25-
கோலாலம்பூர் மாநகரில் நாளை சனிக்கிழமை நடைபெறவிக்கும் பேரணி, முழுப் பாதுகாப்புடன், சுமூகமாக நடைபெறுவதை போலீசார் எல்லா நிலைகளிலும் உறுதிச் செய்வர் என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் உறுதி தெரிவித்துள்ளார்.
இந்தப் பேரணி சுமூகமாக நடைபெறுவதற்கு இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐஜிபி கேட்டுக் கொண்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நடைபெறும் துருன் அன்வார் பேரணியில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் பங்கு கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலை நிறுத்தப்பட்டு வரும் ஜனநாயக உரிமைக்கு ஏற்ப இந்தப் பேரணி நடைபெற்றாலும், அந்த உரிமைக்கு போலீசார் மதிப்பளிப்பதாக டத்தோ ஶ்ரீ காலிட் குறிப்பிட்டார்.








