சைபர்ஜெயா, ஆகஸ்ட்.07-
முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட காணொளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் அவர் ஒரு சாட்சியே தவிர அவர் விசாரணைக்குரிய நபர் அல்ல என்று மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி இன்று தெளிவுபடுத்தியுள்ளது.
எம்சிஎம்சி மேற்கொண்டு வரும் புலன் விசாரணையில் அந்த முன்னாள் பிரதமரின் வாக்குமூலம் தேவைப்படுகிறது. எனவே அவர் சாட்சியாக அழைக்கப்படுகிறார் என்று அந்த ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
பெட்ரோல் ரோன் 95 இலக்குக்கு உரிய மானியம் தொடர்பில் முகைதீன் யாசின் டிக் டோக்கில் வெளியிட்ட காணொளி தொடர்பில் எம்சிஎம்சி தற்போது விசாரணை செய்து வருகிறது.
இந்த விசாரணையில் தங்களின் முழு கவனம், அதன் உள்ளடக்கமே தவிர அதன் குற்றச்சாட்டோ அல்லது வாதமோ அல்ல என்று எம்சிஎம்சி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








