பாகான் டத்தோ, செப்டம்பர்.07-
பள்ளி, கல்லூரிகளில் அதிகரித்து வரும் வன்பகடி சம்பவங்களைக் கட்டுப்படுத்த, மலேசிய அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வரத் தயாராகி வருகிறது. Anti-Buli Tribunal Act, அதாவது ‘வன்பகடி தடுப்பு நடுவர் நீதிமன்றச் சட்டம்' என்றழைக்கப்படும் இந்த புதியச் சட்டம், மாணவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான சட்டப் பரிந்துரையை அமைச்சரவையில் தாக்கல் செய்ய சட்டங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் அஸாலினா ஒத்மான் சையிட்டுக்கு ஆறு மாதக் கால வரையறை கொடுக்கப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார். இந்தச் சட்டத்தை உருவாக்குவதற்கு முன்பு, பெற்றோர்கள்-ஆசிரியர்கள் சங்கங்கள், பலதரப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆகியோருடன் கலந்தாலோசனை நடத்தப்படும். புதியச் சட்டம் மூலம் வன்பகடி முற்றிலும் ஒழிக்கப்பட்டு, மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என ஸாஹிட் உறுதியளித்துள்ளார்.








