Jun 2, 2026
Thisaigal NewsYouTube
குளுவாங் விபத்து: விரைவான விசாரணைக்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவு
தற்போதைய செய்திகள்

குளுவாங் விபத்து: விரைவான விசாரணைக்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவு

Share:

ஜோகூர், குளுவாங்கில் ஐந்து பேர் பலியாவதற்குக் காரணமான ஐந்து வாகன விபத்து குறித்து போலீஸ் துறையினர் தங்களது விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், விசாரணை அறிக்கையை விரைவாக சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஓட்டுநர் உரிமம் என்பது மற்றவர்களின் உயிரைப் பறிக்கும் வகையில் அலட்சியமாக வாகனம் ஓட்டுவதற்கான அனுமதி அல்ல என்று அந்தோணி லோக் சாடியுள்ளார். இந்த விபத்துக்கு முன்பாக, 19 வயது இளைஞர் ஒருவர் தனது 22 வயது சகோதரருடன் பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் அவரது சகோதரர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்.

Related News