Jun 6, 2026
Thisaigal NewsYouTube
தேசிய, மாநிலத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது கடினம்
தற்போதைய செய்திகள்

தேசிய, மாநிலத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது கடினம்

Share:

பொதுத் தேர்தல் சுழற்சிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அரசாங்கங்களின் பதவிக்கால இடைவெளி காரணமாக, நாடாளுமன்ற மற்றும் மாநிலத் தேர்தல்களை ஒரே நேரத்தில் ஒருங்கிணைத்து நடத்துவது சாத்தியமற்றதாகி வருகிறது என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் சட்டமன்றக் கலைப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்டால் ஒழிய, தேர்தலை முன்கூட்டியே நடத்துவது வாக்காளர்களுக்கு செய்யும் அநீதியாகும். பினாங்கு அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ள நிலையில், சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைப்பது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை பாதியில் முடிப்பதற்கு சமம்" என்றார்.

மேலும், பினாங்கு சட்டமன்ற கலைப்பு குறித்து கட்சியின் மத்திய தலைமைத்துவம் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு நடப்போம் என்றும், ஜோகூர் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு உதவ பினாங்கு தேர்தல் இயந்திரம் அங்கு அனுப்பப்படும் என்றும் சாவ் கோன் இயோ குறிப்பிட்டுள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்