Jun 6, 2026
Thisaigal NewsYouTube
16 வயதுக்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை அமல்: புதிய விதிமுறைகள் என்ன
தற்போதைய செய்திகள்

16 வயதுக்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை அமல்: புதிய விதிமுறைகள் என்ன

Share:

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் புதிய சமூக ஊடகக் கணக்குகளைப் பதிவு செய்வதைத் தடுக்கும் புதிய விதிமுறை நேற்று ஜூன் 1 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. 2025 ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் யூடியூப் போன்ற 8 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூக ஊடக நிறுவனங்கள் அனைத்தும் இந்த புதிய விதியை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இதன்படி, பயனர்கள் தங்களின் மைக்காட், கடப்பிதழ் அல்லது மைடிஜிட்டல் ஐடி போன்ற அரசாங்க ஆவணங்கள் மூலம் தங்களின் வயதைச் சரிபார்ப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கணக்கு வைத்துள்ள 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், தங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவிறக்கம் செய்து கொள்வதற்காக ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தகுந்த வயதுச் சான்று இல்லாத கணக்குகள் அனைத்தும் உடனடியாக முடக்கப்படும். இந்த விதிமுறைகளை மீறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு 10 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும் என மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி எச்சரித்துள்ளது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்