Sep 25, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் PH கூட்டம்: இது வழக்கமான சந்திப்பே
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் PH கூட்டம்: இது வழக்கமான சந்திப்பே

Share:

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று காலை நடைபெற்ற நெகிரி செம்பிலான் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களின் சந்திப்பு ஒரு வழக்கமான கூட்டமே தவிர, அது அவசர அமர்வு அல்ல என்று மாநில ஜசெக செயலாளர் சா கீ சின் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் மாநிலத் தேர்தல் தயாரிப்புகள் குறித்து விவாதிக்கவே இக்கூட்டம் கூட்டப்பட்டதாக மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாரூன் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது

இதுகுறித்து ராசா நாடாளுமன்ற உறுப்பினருமான சா கீ சின் கூறுகையில், "இது ஒரு சாதாரண கூட்டமே. நேற்று மதியம் ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறுகிய கால அறிவிப்பின் காரணமாகவே இது அவசரக் கூட்டம் என தவறாகக் கருதப்பட்டது. மிகவும் இணக்கமான சூழலில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேர்தல் இயந்திரங்களின் தயார்நிலை குறித்து மட்டுமே விவாதித்தோம்" என்றார்.

இதற்கிடையில், இந்த கூட்டத்தில் மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் தேதி குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ பி. குணசேகரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News