கிளந்தான், கோத்தா பாருவில் அரைக்கால் சிலுவார் அணிந்ததற்காக அபராதம் செலுத்த சம்மன் வழங்கப்பட்ட கடை உரிமையாளான முஸ்லிம் அல்லாத பெண்ணுக்கு இலவச சட்ட உதவி வழங்குவதற்கு டிஏபி முன் வந்துள்ளது.
பொது இடங்களில் பெண்கள் கால் தொடைகள் தெரியும் அளவிற்கு ஆடைகள் அணியக்கூடாது என்பது கிளந்தானின் கட்டுப்பாடாகும். அந்த விதிமுறையை மீறியதற்காக பெண் ஒருவருக்கு கோத்தா பாரு நகராண்மைக்கழகம் சம்மன் வழங்கியுள்ளது.
அந்தப் பெண்ணுக்காக டிஏபியின் சட்டப்பிரிவை சேர்ந்த வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ அல்லது ஜெலுத்தோங் எம்.பி. ஆர்.எஸ்.மா ராயர் ஆஜராகக்கூடிய சாத்தியம் இருப்பதாக அக்கட்சியின் தலைவர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

Related News

நிபோங் திபால் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் இருவர் கைது

நீலாய் நகைக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை: இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

யுகே முதலீடு மோசடி குற்றச்சாட்டை மறுத்த ஐஜேஎம்: விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அறிவிப்பு

எம்எச்370 தேடும் பணி: 7,236.40 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை எட்டியது; புதிய கண்டுபிடிப்புகள் இல்லை

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு


