Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கெடா, குபாங் பாசுவில் புயல்- வீடுகள் சேதம்

Share:

நேற்று மாலை 3.30 மணியளவில் குபாங் பாசு மாவட்டத்தில் வீசிய பலத்தப் புயல் காரணமாக கம்போங் பீடா 3 மற்றும் கம்போங் பீடா பாரு 4 ஆகிய இடங்களில் பல வீடுகள் சேதமடைந்தததாக பொது தற்காப்பு படையான ஏபிஎம் தெரிவித்துள்ளது.

இந்தப் பேரிடர் தொடர்பில் மாலை 3.45 மணிக்குத் தங்களுக்குப் புகார் கிடைத்ததாகக் குபாங் பாசு மாவட்ட ஏ.பி.எம். அதிகாரி கேப்டன் முஹமாட் அடெனின் சுஹைமி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

குபாங் பாசுவில் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கனத்த மழை மற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாகவும் உயிருடற்சேதம் குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

சொத்துகளின் சேத மதிப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனக் கூறிய அவர், குபாங் பாசு மாவட்டச் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் அப்பகுதியைக் கண்காணித்து, குப்பைகளைச் சுத்தம் செய்ய உதவி வருகிறது என்றார்.

Related News