Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பொருளாதாரப் பயணத்தைத் தொடங்கிய பெரியார் கூட்டுறவு நிறுவனம்
தற்போதைய செய்திகள்

பொருளாதாரப் பயணத்தைத் தொடங்கிய பெரியார் கூட்டுறவு நிறுவனம்

Share:

ஶ்ரீ கோம்பா, ஜன - 8,

பெரியார் கூட்டுறவு நிறுவனம் நேற்று வெற்றிகரமாக தனது பொருளாதாரப் பயணத்தைத் தொடங்கியது.

அக்கூட்டுறவு நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு பங்குப்பத்திரம் வழங்கும் நிகழ்ச்சியை நேற்று அதிகாரப் பூர்வமாகத் தொடக்கி வைத்தப்போது; அதன்தலைவர் முனைவர்- பெரு. அ. தமிழ்மணி மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

பெரியாரின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள முதன்மையான கூட்டுறவு நிறுவனமாக இருப்பதால், அதனுடைய உறுப்பினர்களுக்கு மிகுந்த நம்பிக்கையோடு, அதன் செயல்பாடு இருக்கும் என்று! அவர் தெரிவித்தார்.

நேற்று அதன் உறுப்பினர்களுக்கு பங்குப்பத்திரங்களை வழங்கிய போது; அவருடன் பொருளாதார நிபுணர் இரா.மாசிலாமணியுடன், அக்கூட்டுறவின் தலைமைச் செயலாளர் சி மு விந்தைக் குமரன், துணைச் செயலாளர்- த.பரமசிவம், பொருளாளர் தினகரன்; உள்ளிட்டோருடன் ஒருசில வாரிய இயக்குநர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

விரைவில் அந்நிறுவனத்தின் ஆண்டுக்கூட்டம் நடைபெறவிருப்பதால், உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டி நாடுமுழுமையும் வட்டார வாரியாக மக்களைச் சந்திக்கிற கூட்டங்களை நடத்திட வேண்டுமென்று இயக்குநர்களைக் கேட்டுக்கொள்வதுடன, இதன்வழி, இந்திய சமூகத்தின் சொத்துடமையை அதிகரிக்க முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்று வாரிய உறுப்பினர்களை தமிழ்மணி கேட்டுக் கொண்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்