கடந்த 2022-ஆம் ஆண்டு கோலாலம்பூர், மாண்ட் கியாராவில் தொழிலதிபர் ஒருவரைக் கொலை செய்துவிட்டு, நான்கு ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த 39 வயது வேலையற்ற நபர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டார்.
வி.வி.வடிவேலு என்ற அந்த நபர், கடந்த ஜூலை 11, 2022 அன்று இரவு 11:40 மணியளவில், அமரின் கியாரா குடியிருப்புப் பகுதியின் காவலாளி அறைக்கு அருகே 63 வயது தொழிலதிபர் கோ சொக் சுவான் என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஏற்கனவே தொடர்புடைய மூவர் தண்டனை பெற்றுள்ள நிலையில், தற்போது பிடிபட்ட வடிவேலு மீது குற்றவியல் சட்டம் 302- ஆவர் பிரிவின் கீழ் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்கப்படும்.
தொழில் அதிபர் கொலை தொடர்பில் 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த வடிவேலு. கடந்த மார்ச் 18 ஆம் தேதி பகாங்கில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் ஒளிந்திருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.








