கோலாலம்பூர், நவம்பர்.24-
தற்போது நான்கு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை வரும் புதன்கிழமை வரை தொடரும் வாய்ப்பு உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா எச்சரித்துள்ளது.
இந்த அடை மழையினால் ஆபத்திற்கான இடர்கள் இருப்பதாக அது நினைவுறுத்தியுள்ளது.
கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூர் உட்பட நான்கு மாநிலங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் கன மழை தொடர்வதாக அது குறிப்பிட்டுள்ளது.








