ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.18-
பினாங்கு மாநிலத்தில் பதிவு செய்யப்படாத குழந்தை பராமரிப்பு மையங்கள் அதிகரித்து வருவது குறித்து அம்மாநில அரசு கவலையடைந்துள்ளது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 154 பதிவு செய்யப்பட்ட தஸ்காக்களும், 468 தடிக்காக்களும், 164 பராமரிப்பு மையங்களும் உள்ள நிலையில், கூடுதலாக 55 பதிவு செய்யப்படாத தஸ்காக்களும், 97 தடிக்காக்களும், 85 பராமரிப்பு மையங்களும் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், மாநில சமூக மேம்பாடு, நலன் மற்றும் முஸ்லிம் அல்லாதோர் விவகாரக் குழுவின் தலைவர் லிம் சியூ கிம் கூறுகையில், இவ்விவகாரத்தில் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, பதிவு செய்யப்படாத பராமரிப்பு மையங்கள் உட்பட அனைவருடனும் கூட்டங்களை நடத்தி குழந்தைப் பராமரிப்பிலுள்ள சவால்கள் குறித்து கலந்துரையாடும் என்று தெரிவித்துள்ளார்.








