Dec 5, 2025
Thisaigal NewsYouTube
நீதித்துறையின் மாண்பைக் காக்க புத்ராஜெயாவில் திரண்டனர் 400 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்
தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் மாண்பைக் காக்க புத்ராஜெயாவில் திரண்டனர் 400 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்

Share:

புத்ராஜெயா, ஜூலை.14-

நாட்டின் நீதித்துறையின் மாண்பு, அதன் நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரம் காக்கப்படுவதற்கு அடையாளமாக புத்ராஜெயாவில் நீதித்துறை கட்டடத்திற்கு முன், 400 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு, தங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர்.

கருப்பு நிற அங்கியும், வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்த வழக்கறிஞர்கள், நீதித்துறையின் மாண்பைக் காக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, பல்வேறு சுலோக அட்டைகள் மற்றும் பதாகைகளை ஏந்திய வண்ணம் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் நீதித்துறைக் கட்டடத்திலிருந்து பிரதமர் அலுவலகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர்களான அம்பிகா ஸ்ரீனிவாசகன், கேரன் சியா, பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் ஆகியோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களில் அடங்குவர்.

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணியில், நீதித்துறையில் தனிநபர்களின் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

அதே வேளையில் நான்கு அம்சங்களை உள்ளடக்கியப் பரிந்துரைகளை அவர்கள் முன் வைத்தனர். நேர்மையும், நம்பகத்தன்மையும் கொண்ட ஒருவர், நாட்டின் தலைமை நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும், போதுமான ஆதாரங்களுடன் தரமான தெளிவான, நேர்மையான தீர்ப்பின் உள்ளடக்கம் இருக்க வேண்டும், நீதிமன்றங்களில் காலியாகியுள்ள உயர் பதவிகள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

Related News

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்