Aug 16, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதமாக வெளிநாட்டினர் நடத்தும் வணிகங்கள் மீது கடும் நடவடிக்கை – பொருளாதார அமைச்சு
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக வெளிநாட்டினர் நடத்தும் வணிகங்கள் மீது கடும் நடவடிக்கை – பொருளாதார அமைச்சு

Share:

நாட்டில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் நடத்தி வரும் வணிகங்கள் மீது அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளையில், வாடகை இடைத்தரகர் நடைமுறைகளை கட்டுப்படுத்தும் பரிந்துரைகளும் விரைவில் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், விசாக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதால், உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் நடத்தும் வணிகங்களுக்கு இடையே நியாயமற்ற போட்டி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மலேசியர்களால் நடத்தப்படும் வணிகங்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படுவதாக அமைச்சு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News