ஈப்போ, செப்டம்பர்.04-
பேரா மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது, மேடையில் அத்துமீறி நுழைந்த மாது விவகாரம் தொடர்பில் பொய்யான தகவலைப் பதிவேற்றம் செய்தது தொடர்பில் மூவரை மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி விசாரணை செய்து வருகிறது.
தங்களின் முக நூலிலும், டிக் டாக் கணக்கிலும் இனவாதத்தன்மையில் பொய்யான தகவல்களைப் பரப்பியதற்காக அந்த மூவரும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக எம்சிஎம்சி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேடையில் அத்துமீறி நுழைந்த மாது சீனர் என்று கூறுப்பட்டது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களின் இத்தகையச் செயல் இனப் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாகும் என்று எம்சிஎம்சி குறிப்பிட்டுள்ளது.








