Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கும் விவகாரத்தில் கையூட்டும் மிரட்டலும் ?காவல் துறையில் புகார் அளித்துள்ள பெர்சத்து
தற்போதைய செய்திகள்

பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கும் விவகாரத்தில் கையூட்டும் மிரட்டலும் ?காவல் துறையில் புகார் அளித்துள்ள பெர்சத்து

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வரும் நிலையில், அவ்விவகாரத்தில் கையூட்டு அல்லது மிரட்டல் போன்றவை ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வன் அஹ்மாட் ஃபைசால் வான் அஹ்மாட் கமால் தெரிவித்தார்.

காவல் துறையில் பெர்சத்து கட்சி புகார் அளித்திருப்பதோடு வெகு விரைவில் ஊழல் தடுப்பு ஆணையத்திடமும் ஒரு புகாரைக் கொடுக்க இருப்பதாகவும் அப்புகார்கள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தப்படும் எனவும் வான் அஹ்மாட் ஃபைசால் குறிப்பிட்டார்.

அந்தப் புகார்கள் குறித்து சம்பந்தப்பட்டத் துறைகள் இன்னும் தமக்கு எந்தவித பதிலும் கொடுக்கவில்லை என வான் அஹ்மாட் ஃபைசால்கூறிய நிலையில், மிக விரைவில் காவல் துறை அதற்கான நடவடிக்கையை எடுக்கும் என உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் உறுதி அளித்தார்.

Related News