அலோஸ்டாரிலுள்ள கோத்தா ஸ்டார், பென்டாங் ஆகிய வட்டாரங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்த ' பிரி கும்பலை ' சேர்ந்த மூன்று ஆடவர்களும் ஒரு பெண்ணையும் கைது செய்திருப்பத்தாக கெடா மாநில காவல்துறை தலைவர் டத்தோ பிசோல் பின் சாலே தெரிவித்தார்.
கடந்தரக்டோபர் 29 ஆம் திகதி கெடா மாநில குற்றப்புலனாய்வுப் பிரிவினர்கள் நடத்திய அதிரடி சோதனையில் இந்த ' பிரி கும்பலை ' கவல்துறையினர் முறியடித்துள்ளனர் . கைது செய்யப்பட்ட நால்வரும் 27 வயது முதல் 39 வயதுடையவர்கள் ஆவர் . இக்கும்பல் அலோஸ்டார் சுற்றுவட்டாரங்களில் வீடுகள் ,கடைப்பகுதிகள் , கார்கள் சம்ப்னத[[அட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்றார் டத்தோ பிசோல் .
மேலும் , பிரி கும்பல் கைதுக்கு பிறகு , அலோஸ்டார் மாவட்டத்தில் 22 கொள்ளைச் சம்பவங்களின் குற்றப்புகார்கள் தீர்வுப் பெற்றிருப்பத்தாக பிசோல் கூறினார் . அதுடன் அந்நால்வரிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் , சாவிகள் , மோட்டார் வேன் இன்னும் சில பொருட்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் .
கைதானவர்கள் அனைவரும் போதைப்பொருள் உட்கொண்டுள்ளத்தோடு இதற்கு முன்பு அவர்களின் மீது குற்றச் செயல்கள் பதிவுகளும் உள்ளன என்றார்







