Jul 10, 2026
Thisaigal NewsYouTube
புடி மடானி டீசல் திட்டத்தில் முக்கிய மாற்றங்கள் - நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகின்றது
தற்போதைய செய்திகள்

புடி மடானி டீசல் திட்டத்தில் முக்கிய மாற்றங்கள் - நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகின்றது

Share:

பொதுமக்களின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளைத் தொடர்ந்து, புடி மடானி டீசல் மானியத் திட்டத்தில் பல முக்கிய மாற்றங்களை மடானி அரசாங்கம் அறிவித்துள்ளது.

தகுதியான மலேசியர்களுக்கு மட்டுமே டீசல் மானியம் சென்றடைவதுடன், மானிய முறைகேடுகளையும் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்ஸா அசிசான் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு டீசல் வாகனங்களின் உரிமை மாற்றக் கட்டணம் முழுமையாக விலக்கப்படும் என்று நிதி அமைச்சு சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உண்மையான வாகனப் பயனாளர்களான நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு டீசல் மானியத் தகுதியை மாற்றிக் கொள்ளவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், நிறுவனங்களுக்குச் சொந்தமான தனியார் பிக்கப் மற்றும் ஜீப் வகை டீசல் வாகனங்களுக்கும் புடி டீசல் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தகுதியான வாகன உரிமையாளர்கள் இன்று ஜூன் 27-ஆம் தேதி முதல் மைகார்ட் மூலம் லிட்டருக்கு 2.15 ரிங்கிட் விலையில் மானிய டீசலைப் பெற முடியும்.

இந்நிலையில், நாடு முழுவதும் ஜூலை 1 -ஆம் தேதி முதல் லிட்டருக்கு 2.10 ரிங்கிட் என்ற விலையில் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

புடி மடானி டீசல் திட்டத்தில் முக்கிய மாற்றங்கள் - நாடு மு... | Thisaigal News