பணியாளரின் ஒப்புதலும் தீபகற்ப மலேசிய ஆள் பலத் துறையின் தலைமை இயக்குநரின் ஒப்புதலும் இருந்தால் மட்டுமே முதலாளிகள் ஊதியத்தைப் பணமாகக் கொடுக்க முடியும்.
இது குறித்து மனிதவளத்துறை அமைச்சர், வி சிவக்குமார் கூறுகையில், வங்கிக் கணக்கு மூலம் சம்பளம் வழங்காத முதலாளிகளுக்கு வேலைச் சட்டம்19மின்படி 50 ஆயிரம் வெள்ளிக்கு மேற்போகாத அபராதம் விதிக்கப்படும் என்றார்.
இன்று கோலாலம்பூர் பெரிய சந்தையில் ஆள்பலத்துறையுடன் இணைந்து தாம் நடத்திய சோதனையில், 34 முதலாளிகளில் 19 பேர் ஊதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாமல் பணமாகக் கொடுக்கும் குற்றத்தையும் இதர சில குற்றங்களையும் புரிந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
ஊழியர் அல்லது தூதரகத்திடம் இருந்து த்ங்களுக்கு புகார் வந்தால், அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பின் உடன்படிக்கைக்கு ஏற்ப தற்போதுள்ள சட்டங்களைப் பின்பற்றாத எந்தவொரு முதலாளி மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் பலமுறை வலியுறுத்தி இருந்தடையும் சிவக்குமார் சுட்டிக் காட்டினார்.








