Oct 11, 2026
Thisaigal NewsYouTube

ஓரினப்புணர்ச்சி, விசாரணை நடைபெற்று வருகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஓரினப்புணர்ச்சி, விசாரணை நடைபெற்று வருகிறது

கோத்தா கினபாலு, மே.19-

சபா, சண்டக்கானில் உள்ள ஒரு கல்வி மையத்தின் அதன் தலைமை வார்டன் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஓரினப்புணர்ச்சி தொடர்புடைய குற்றச்சாட்டு, தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் தலைவர் கே. ராமசாமி தெரிவித்தார்.

இக்குற்றச்சாட்டு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாகவும், புதிய நிலவரம் குறித்து ஊடகங்களுக்கு நிச்சயம் தெரிவிக்கப்படும் என்றும் ராமசாமி குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட தலைமை வார்டன், தன்னை ஓரினப்புணர்ச்சி செய்ததாக அந்த கல்வி மையத்தைச் சேர்ந்த ஒருவர் விவரித்துள்ள ஆடியோ ஒன்றைப் பாடகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →