Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அன்வாரின் அறிவிப்பிற்கு ரமணன் வரவேற்பு
தற்போதைய செய்திகள்

அன்வாரின் அறிவிப்பிற்கு ரமணன் வரவேற்பு

Share:

இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்துவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மித்ரா வாயிலாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுக்கவிருக்கும் பிரத்தியேக நடவடிக்கைகளுக்கு மித்ரா சிறப்பு பணிக்குழுத் தலைவர் டத்தோ ரா. ரமணன் வரவேற்றுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 12 ஆவது மலேசிய திட்டத்தின் மத்தியக்கால ஆய்வறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றுகையில் வருமானம் குறைந்த இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு மித்ரா வாயிலாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருப்பது, இந்திய சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள அக்கறையையும் கடப்பாட்டையும் காட்டுவதாக உள்ளது என்று சுங்கை பூலோ எம்.பி-யுமான ரமணன் குறிப்பிட்டார்.

இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார மேம்பாடுகள் தொடர்பில் சில விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கு பிரதமர் அன்வாரை விரைவில் சந்திக்க விருப்பதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.

Related News